Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவின் இளம் சதுரங்க மேதை குடும்பம், தொடர்ந்து பிரிட்டனில் தங்க அனுமதி

9 வயது சதுரங்க மேதை ஷ்ரேயாஸ் ராயலும் (Shreyas Royal) அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து பிரிட்டனில் தங்க அனுமதி பெற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்தியாவின் இளம் சதுரங்க மேதை குடும்பம், தொடர்ந்து பிரிட்டனில் தங்க அனுமதி

(படம்: Shreyas Royal/ Facebook)


9 வயது சதுரங்க மேதை ஷ்ரேயாஸ் ராயலும் (Shreyas Royal) அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து பிரிட்டனில் தங்க அனுமதி பெற்றுள்ளனர்.

ஷ்ரேயாஸை இளம் சதுரங்க விளையாட்டாளர்களிடையே மேதை என்று பாராட்டிய பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் சஜிட் ஜாவிட் (Sajid Javid), அதன் காரணமாக சிறுவனும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து பிரிட்டனில் தங்குவதை அனுமதிக்க முடிவு செய்ததாகக் கூறினார்.

ஷ்ரேயாஸ் மூன்று வயதிலிருந்து பிரிட்டனில் வசித்து வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்ட அவர், தற்போது பிரிட்டனைப் பிரதிநிதித்து அனைத்துலகப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அடுத்த மாதம் அவரது தந்தையின் வேலையிட விசா காலாவதியாகியதும் சிறுவனும் அவரது குடுமபத்தினரும் மீண்டும் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.

ஆனால் இப்பொழுது புது விசாவின் கீழ் அவர்கள் தொடர்ந்து பிரிட்டனில் தங்கலாம்.

இது குறித்து ஷ்ரேயாஸின் தந்தைக்கு நேற்றுத் (ஆகஸ்ட் 10) தகவல் கிடைத்தது.

செய்தி அறிந்த ஷ்ரேயாஸ் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்ததாக அவரது தந்தை கூறினார்.

18 வயதில் உலக சதுரங்க வெற்றியாளர் ஆவது ஷ்ரேயாஸின் கனவு.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்