Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'இந்திய கதாபாத்திரம் சித்திரிக்கப்படும் விதத்தில் பாகுபாடு' - Simpsons தொடரின் குரல் கலைஞர் விலகுகிறார்

Simpsons என்ற பிரபல ஆங்கில உயிரோவியத் தொடரில் இடம்பெற்ற இந்தியக் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுக்கும் கலைஞர் அந்த வேலையிலிருந்து விலகவிருப்பதாகக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
'இந்திய கதாபாத்திரம் சித்திரிக்கப்படும் விதத்தில் பாகுபாடு' - Simpsons தொடரின் குரல் கலைஞர் விலகுகிறார்

(படம்: Simpsons)

Simpsons என்ற பிரபல ஆங்கில உயிரோவியத் தொடரில்
இடம்பெற்ற இந்தியக் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுக்கும் கலைஞர் அந்த வேலையிலிருந்து விலகவிருப்பதாகக் கூறியுள்ளார்.

அத்தொடரில் Apu Nahasapeemapetilon என்ற இந்தியக் கதாபாத்திரம் சித்திரிக்கப்படும் விதத்தில் பாகுபாடு உள்ளதாக ரசிகர்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தியர்கள் ஒரே மாதிரியான மனப்போக்கு உடையவர்களாகச் சித்திரிக்கப்படுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Apu-வுக்குக் குரல் கொடுக்கும் ஹேங் அசாரியா என்ற கலைஞர் இந்தியப் பேச்சு வழக்கில் பேசுவதையும் ரசிகர்கள் சாடினர்.

அதனைத் தொடர்ந்து, அவர் Simpsons தயாரிப்பிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார்.

1989-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Simpsons தொடருக்கு, அண்மைக்காலமாக ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்