Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிங்கப்பூரை அதிகக் கிருமிப்பரவல் அபாயம் கொண்ட நாடாக வகைப்படுத்தும் ஜெர்மனி

ஜெர்மனி, சிங்கப்பூரை அதிகக் கிருமிப்பரவல் அபாயம் கொண்ட நாடாக வகைப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜெர்மனி, சிங்கப்பூரை அதிகக் கிருமிப்பரவல் அபாயம் கொண்ட நாடாக வகைப்படுத்தியுள்ளது.

அது நாளை முதல் நடப்புக்கு வரும் என்று ஜெர்மனியின் நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு அமைப்பான Robert Koch Institute தெரிவித்துள்ளது.

அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பல்கேரியா (Bulgaria), கேமரூன் (Cameroon), குரோஷியா (Croatia), கோங்கோ குடியரசு ஆகிய நாடுகளும் அதிகக் கிருமிப்பரவல் அபாயம் கொண்ட நாடுகளின் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளன.

இருப்பினும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர்ப் பயணிகள் தொடர்ந்து ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சிங்கப்பூரிலுள்ள ஜெர்மானியத் தூதரகம் கூறியுள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் கூறப்பட்டது.

அந்தப் பயணிகள், ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன், www.einreiseanmeldung.de எனும் இணையத்தளத்தில் பதிவுசெய்துகொண்டால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழையோ கிருமித்தொற்று இல்லை என்று நிரூபிக்கும் ஆவணத்தையோ பதிவேற்றம் செய்யவேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளுக்கு, சிறப்புச் சூழல்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஜெர்மானியத் தூதரகம் சொன்னது.

12 வயதுக்கு உட்பட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிள்ளைகளும் வீட்டில் 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்