Images
ஒற்றையர் தினம் - முதல் ஒரு மணி நேரத்தில் 13 பில்லியன் டாலர் விற்பனை
ஒற்றையர் தினமான இன்று, Alibaba நிறுவனத்தின் இணைய வர்த்தகத் தளத்தில் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
முதல் ஒரு மணி நேரத்தில் 13 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள பொருள்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அது 32 விழுக்காடு அதிகம்.
ஆண்டுதோறும் நவம்பர் 11ஆம் தேதி ஒற்றையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு Alibaba நிறுவனம் பல சலுகைகளை வழங்குகிறது.
Alibaba நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான, டேனியல் ஜாங் 2009 இல் ஒற்றையர் தினத்தைப் பிரபலப்படுத்தினார்.
இன்று அது உலகின் ஆகப்பெரிய இணைய வர்த்தக நிகழ்வாக வளர்ந்துள்ளது.