ஒற்றையர் தினத்தை முன்னிட்டு மலிவான விலையில் பல்வேறு பொருள்கள்
இன்று ஒற்றையர் தினம். பல்வேறு பொருள்களை மலிவான விலையில் வாங்கக் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
ஆண்டுதோறும் நவம்பர் 11ஆம் தேதி ஒற்றையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு Alibaba நிறுவனத்தின் இணைய வர்த்தகத் தளத்தில் பல சலுகைகள் வழங்கப்படும்.
Alibaba நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான, டேனியல் ஜாங் 2009 இல் ஒற்றையர் தினத்தைப் பிரபலப்படுத்தினார்.
இன்று அது உலகின் ஆகப்பெரிய இணைய வர்த்தக நிகழ்வாக வளர்ந்துள்ளது.
200,000-க்கும் மேற்பட்ட பிரபல வர்த்தக நிறுவனங்கள் இந்த ஆண்டின் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக Alibaba நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 மில்லியனுக்கும் அதிகமான புதிய பொருள்கள் சலுகை விலையில் விற்பனைக்கு விடப்படும்.
500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Alibaba இணைய வர்த்தகத் தளத்தில் சென்ற ஆண்டு ஒற்றையர் தினத்தின்போது, சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் விற்கப்பட்டன.