Images
  • vaccine
    (கோப்புப் படம்: Reuters/Eric Gaillard)

சீனாவின் Sinovac தடுப்பூசி 50.4% செயல்திறன் மட்டுமே: பிரேசில்

சீனாவின் மருந்தாக்க நிறுவனமான Sinovac தயாரித்துள்ள தடுப்பூசிகள், 50.4 விழுக்காட்டுச் செயல்திறன் கொண்டவை என்று பிரேசிலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் தெரிவிக்கப்பட்டதைக் காட்டிலும் தடுப்பூசியின் செயல்திறன் குறைவு என்று தெரியவந்துள்ளது.

அரசாங்க ஒப்புதல் பெறுவதற்கான 50 விழுக்காட்டு வரம்பைச் சற்றே தாண்டியுள்ளது Sinovacஇன் தடுப்பு மருந்து.

பிரேசிலிய அரசாங்கம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள இரு தடுப்பூசிகளில் ஒன்று, Sinovac.

உயிரற்ற கிருமியின் அணுக்களைக் கொண்டு மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பக்கவிளைவுகள் இன்றித் தூண்டும் தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது Sinovac தடுப்பூசி.

சிங்கப்பூர், இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அதை வாங்க முன்வந்துள்ளன.

மிதமானது முதல் கடுமையானது வரையிலான கோவிட்-19 நோய் அறிகுறிகளுக்கு எதிராகத் தடுப்பூசி 78 விழுக்காட்டுச் செயல்திறனைக் கொண்டுள்ளதாக பிரேசிலின் ஆய்வு நிலையமான Butantan, கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

ஆனால், ஆய்வு முடிவுகளில் லேசான நோய் அறிகுறிகள் உள்ளவர்களிடையே தடுப்பூசியின் செயல்திறனைச் சேர்த்துக்கொண்டபோது அதன் செயல்திறன் குறைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

வெவ்வேறு நாடுகளில் Sinovac தடுப்பூசி வெவ்வேறு செயல்திறன் கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

Top