Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மகளின் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கு மாணவர்களின் கட்டுரையைப் பயன்படுத்திய பேராசிரியர்

பேராசிரியர் ஒருவர் தமது மகளின் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான ஆய்வுக் கட்டுரையை மாணவர்களிடம் எழுதச் சொல்லி வாங்கியிருக்கிறார்.   

வாசிப்புநேரம் -
மகளின் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கு மாணவர்களின் கட்டுரையைப் பயன்படுத்திய பேராசிரியர்

படம்: AFP/Ed JONES

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சோல்: பேராசிரியர் ஒருவர் தமது மகளின் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான ஆய்வுக் கட்டுரையை மாணவர்களிடம் எழுதச் சொல்லி வாங்கியிருக்கிறார்.

மகள் சிறந்த பல்மருத்துவப் பள்ளியில் சேர்வதற்கு 3 மாதக் கால ஆராய்ச்சி தேவைப்பட்டது.

மாணவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஆராய்ச்சியின் போலி முடிவுகளை மகளின் பெயரில் வெளியிட்டார் பேராசிரியர்.

அதன் தொடர்பிலான கட்டுரையைக் கொண்டு மகள் சோலின் உயரிய பல்மருத்துவப் பள்ளியில் இடம்பிடித்தார்.

தென்கொரியாவின் கல்விச் சூழல் கடுமையான போட்டித்தன்மைக்குப் பெயர்பெற்றது.

கல்வியில் பெறும் சாதனை மாணவர்களின் வேலை, செல்வாக்கு, திருமண வரன்களை நிர்ணயிக்கும்.

பேராசிரியர் மீது நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மாணவர்களைக் கொண்டு மகளின் பெயரில் தொண்டூழியச் சேவை செய்யவைத்ததாக நம்பப்படுகிறது. அதற்கு அவர் மாணவர்களுக்குச் சுமார் 400 டாலர் பணம் கொடுத்திருக்கிறார்.

பேராசிரியரின் மகள் வாங்கியிருந்த பல விருதுகளுக்கும் மாணவர்களின் ஆராய்ச்சி பயன்படுத்தப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்