Images
  • kappal
    படம்: PNG

கடலில் கவிழ்ந்த சரக்குக் கப்பல் : 3 தென்கொரியர்கள் மீட்கப்பட்டனர்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திற்கு அருகே உள்ள கடல்பகுதியில் சுமார் 4,000 கார்களுடன் கவிழ்ந்த கப்பலில் இருந்து 3 தென்கொரியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சரக்குக் கப்பலில் துளையை ஏற்படுத்தி அவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறினர்.

சரக்குக் கப்பலுக்குள் இன்னும் ஒருவர் மாட்டிக்கொண்டுள்ளதாகவும் அவரை மீட்கத் தற்போது போராடி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கப்பலில் தீ ஏற்பட்டதால், இரவு நேரங்களில் மீட்புப் பணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டன.

கடந்த ஞாயிறு அன்று 20 பேர் கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர்.

Top