Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்கொரியாவில் அடுத்த மாதத்திலிருந்து வழக்கநிலைக்குத் திரும்புவதற்கான அணுகுமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன

தென்கொரியாவில் அடுத்த மாதத்திலிருந்து வழக்கநிலை திரும்புவதற்கான அணுகுமுறை செயல்படுத்தப்படும்.

வாசிப்புநேரம் -

தென்கொரியாவில் அடுத்த மாதத்திலிருந்து வழக்கநிலை திரும்புவதற்கான அணுகுமுறை செயல்படுத்தப்படும்.

கடந்த வார இறுதியில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அங்குப் புதிய உச்சத்தை எட்டியது.

எனினும், COVID-19 கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட மாட்டா என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறினார்.

தென்கொரியாவில் COVID-19 நோயுடன் வாழப் பழகிக்கொள்வதற்கான இயக்கம் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.

முகக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று திரு. மூன் குறிப்பிட்டார்.

தென்கொரிய மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை அந்த இலக்கு எட்டப்பட்டது.

ஆக அண்மை நிலவரப்படி சுமார் 36 மில்லியன் பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தென்கொரியாவில் புதிதாக இன்று 1,190 பேரிடம் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும் 7 பேர் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்