Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இத்தாலிய மருத்துவமனையில் கைவிடப்பட்ட அரிய தோல் நோயுடைய குழந்தை

இத்தாலியின் டியூரின் (Turin) நகரில் தோல் சம்பந்தப்பட்ட அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் கைவிடப்பட்டது.

வாசிப்புநேரம் -

இத்தாலியின் டியூரின் (Turin) நகரில் தோல் சம்பந்தப்பட்ட அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் கைவிடப்பட்டது.

4 மாத ஆண் குழந்தையான ஜியோவானின்னோ (Giovannino) harlequin ichthyosis எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

மரபணுக் கோளாறு காரணமாக ஏற்படும் அந்த நோயால் குழந்தையின் தோல் வறண்டு, தடித்துப் போகும்.

இதனால் குழந்தைமீது சூரியக் கதிர்கள் படாதிருக்கவேண்டும்.

ஆகஸ்ட் மாதம் பிறந்த குழந்தை இதுவரை மருத்துவமனையில் தாதியரின் கண்காணிப்பில் வளர்ந்துவருகிறது.

ஆனால் இன்னும் சில வாரங்களில் குழந்தை வீடு திரும்பவேண்டும் என்று BBC தெரிவித்துள்ளது.

குழந்தை ஏன் கைவிடப்பட்டது என்பது தெரியவில்லை.

குழந்தையை அனைத்து ஊழியர்களும் மாறி மாறிப் பராமரித்து வருகின்றனர்.

ஜியோவானின்னோவின் பெற்றோரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

அதே வேளை குழந்தைக்குத் தற்காலிக இருப்பிடத்தையும் அவர்கள் தேடி வருகின்றனர்.

குழந்தையின் தோல் நோயால் அதற்குத் தனிப்பட்ட பராமரிப்பு தேவைப்படுகிறது.

குழந்தையின் நிலை அறிந்த பலரும் அதனைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக BBC தெரிவித்துள்ளது.

எல்லாக் கோரிக்கைகளையும் பரிசீலித்து வருவதாக, டியூரின் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்