Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரபலமாகும் skull-breaker சவால் - ஆபத்தாகும் விளைவுகள்

TikTok சமூக ஊடக செயலியில் இளையர்களிடையே skull-breaker சவால் பிரபலமடைந்து வருகிறது.

வாசிப்புநேரம் -
பிரபலமாகும் skull-breaker சவால் - ஆபத்தாகும் விளைவுகள்

(படம்: Leonard Bartell/ Facebook)


TikTok சமூக ஊடக செயலியில் இளையர்களிடையே skull-breaker சவால் பிரபலமடைந்து வருகிறது.

இருவர் மற்றொருவரைக் குதிக்கச் சொல்லி ஏமாற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்போது குதிப்பவரின் கால்களை உதைத்து விழச் செய்வதே skull-breakerசவால்.

அதனால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தனவை. மாணவர்கள் சிலர் அந்தச் சவாலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கை, கால் முறிவுகள், தலையில் பலந்த காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. சிலர் மயக்கமடையலாம். அந்தப் பாதிப்புகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சவாலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் 13 வயது Kathleen DeJesus அதிர்ச்சியான நிலையில் இரண்டு நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது.

சவாலில் பங்கேற்ற மற்றொரு மாணவர் Olivia Ross, ஒரு வினாடிக்கு எல்லாம் இருண்டது. அதனைத் தொடர்ந்து கடுமையான தலைவலி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

வேடிக்கை விளையாட்டால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைத் தொடர்ந்து சிங்கப்பூர்க் கல்வியமைச்சு பெற்றோருக்கு அதுகுறித்து கடிதம் மூலம் நினைவூட்டியுள்ளது.

பிள்ளைகள் அந்தச் சவாலில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வரும் ஆபத்தான போக்குகள் பற்றி வகுப்பறையில் இணைய விழிப்புணர்வுப் பாடம் நடத்தப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்