Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பனிப்புயலால் Ikea கடையிலேயே இரவைக் கழித்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள்...

டென்மார்க்கில் பனிப்புயலால் Ikea கடை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் வீடுதிரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.

வாசிப்புநேரம் -

டென்மார்க்கில் பனிப்புயலால் Ikea கடை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் வீடுதிரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.

படுக்க மெத்தையும் சாப்பிட உணவும் இருக்கும்போது என்ன கவலை?

கடையில் சிக்கிக்கொண்ட சுமார் 25 பேரும் அங்கேயே இரவைக் கழிக்க முடிவெடுத்தனர்.

காட்சிக்கூடத்தில் உள்ள மெத்தைகளைப் பயன்படுத்திக்கொண்டு கடை உணவை உட்கொண்டவாறு அவர்கள் இரவைக் கழித்ததாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

வட டென்மார்க்கின் சில பகுதிகள் பனியால் பெரிதளவு பாதிக்கப்பட்டன.

ஆல்போர்க் (Aalborg) விமான நிலையத்திலும் 300 பேர் இரவைச் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக BBC சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்