Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரொட்டி தயாரிக்கத் தாமதமானதால் கொலையா?

ஃபிரஞ்சுத் தலைநகர் பாரிஸில், உணவகம் ஒன்றில் கேட்ட உணவு உடனே கிடைக்கவில்லை என்பதால் ஊழியரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர்.

வாசிப்புநேரம் -
ரொட்டி தயாரிக்கத் தாமதமானதால் கொலையா?

(படம்: AFP)

ஃபிரஞ்சுத் தலைநகர் பாரிஸில், உணவகம் ஒன்றில் கேட்ட உணவு உடனே கிடைக்கவில்லை என்பதால் ஊழியரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர்.

நொய்சி-லெ-கஹான் (Noisy-le-Grand) வட்டாரத்தில் நடந்தது அந்தச் சம்பவம்.

சேண்ட்விச் (sandwich) ரொட்டி விரைவாகத் தயாரிக்கப்படவில்லை என்பதால் சினமடைந்தார் வாடிக்கையாளர்.

மருத்துவ உதவியாளர்கள் அந்த 28 வயது ஊழியருக்குச் சிகிச்சை அளிக்க முயன்றும் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அச்சம்பவத்தின் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்