Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாம்புகளுக்குக் கால்களா? 70 மில்லியன் ஆண்டுகளாக இருந்தனவாம்

70 மில்லியன் ஆண்டுகளாக பாம்புகளுக்குப் பின்னங்கால்கள் இருந்தனவாம். 

வாசிப்புநேரம் -
பாம்புகளுக்குக் கால்களா? 70 மில்லியன் ஆண்டுகளாக இருந்தனவாம்

படம்: Pixabay

70 மில்லியன் ஆண்டுகளாக பாம்புகளுக்குப் பின்னங்கால்கள் இருந்தனவாம்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அவற்றின் தொல்படிமம் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக CNN தெரிவித்துள்ளது.

'Najash rionegrina' எனும் பழங்கால இனத்தைச் சேர்ந்த பாம்புகளின் மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்பொரு காலத்தில் பாம்புகளுக்குக் கால்கள் இருந்தன என்றும் அவை காலப்போக்கில் மறைந்தன என்றும் ஆய்வாளர்கள் பல காலமாகவே நம்பிவந்துள்ளனர்.

ஆனால், பாம்புகளிடையே அந்த மாற்றம் எப்போது நேர்ந்தது என்பதை அறியும் அளவுக்குப் போதுமான தொல்படிமங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

கால்கள் இல்லாமல் வாழும் ஆற்றலை வளர்த்துக்கொண்டதால் குறைந்த காலத்திலேயே பாம்புகள் கால்களை இழந்ததாக நம்பப்பட்டது.

ஆனால் பதப்படுத்தப்பட்ட நிலையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொல்படிமத்தை ஆராய்ந்ததில் பாம்புகள் நீண்டகாலம் கால்களுடன் இருந்ததாக இப்போது தெரியவந்துள்ளது என CNN தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்