Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

படங்கள், காணொளிகளை எடுக்கும் குளிர்கண்ணாடி...விருப்பமா?

படங்கள், காணொளிகளை எடுத்து நேரடியாக Snapchat செயலியில் பதிவேற்றம் செய்யும் புது வடிவக் குளிர்கண்ணாடிகளை Snap Inc நிறுவனம் வெளியிடவுள்ளது.

வாசிப்புநேரம் -
படங்கள், காணொளிகளை எடுக்கும் குளிர்கண்ணாடி...விருப்பமா?

(படம்: Reuters)

படங்கள், காணொளிகளை எடுத்து நேரடியாக Snapchat செயலியில் பதிவேற்றம் செய்யும் புது வடிவக் குளிர்கண்ணாடிகளை Snap Inc நிறுவனம் வெளியிடவுள்ளது.

இதற்கு முன் Spectacles எனும் பெயர்கொண்ட அந்தக் கண்ணாடி வகை, அவ்வளவாக விற்பனையாகவில்லை.

இப்போது, புதிய வடிவத்துடன் மிகைமெய்நிகர் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது குளிர்கண்ணாடி.

2017இல் உற்பத்தி செய்யப்பட்ட கண்ணாடிகளில் சுமார் 40 மில்லியன் டாலர் பெறுமானமுள்ளவை விற்பனையாகவில்லை.

புதிய குளிர்கண்ணாடிகளின் விலை சுமார் 380 டாலர்.

இரு கேமராக்களைக் கொண்டுள்ள கண்ணாடி, படங்களுக்கு முப்பரிமாணத் தோற்றத்தைக் கொடுக்கும் ஆற்றல் படைத்தவை என்று நிறுவனம் கூறியுள்ளது.

மிகைமெய்நிகர் 'filters' மூலம் பிரபலமானது சமூக வலைத்தளம் Snapchat.

கடந்த காலாண்டில் அதற்குப் புதிதாக 13 மில்லியன் பயனீட்டாளர்கள் கிடைத்தனர்.

அவர்களில் கிட்டத்தட்ட 9 மில்லியன் பேர் மிகைமெய்நிகர் கண்ணாடிகளின் மூலம் சேர்ந்ததாக நிறுவனம் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்