Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Snapchat செயலியின் மூலம், கடத்தப்பட்ட தோழியைக் கண்டிபிடித்த இளையர்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கடத்தப்பட்ட 14 வயதுப் பெண்ணை Snapchat செயலியின் மூலம் கண்டுபிடித்தனர் அவரது நண்பர்கள்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கடத்தப்பட்ட 14 வயதுப் பெண்ணை Snapchat செயலியின் மூலம் கண்டுபிடித்தனர் அவரது நண்பர்கள்.

55 வயது ஆடவர் ஒருவரைச் சந்திக்கச் சென்றார் 14 வயதுப் பெண். ஆடவர் அவருக்குப் போதைப்பொருள் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்தார். இரு ஆடவர்களின் உதவியுடன் பெண்ணை ஹோட்டல் ஒன்றுக்குக் கடத்திச் சென்று அவரைப் பலாத்காரம் செய்தார்.

ஹோட்டலில் நினைவு திரும்பிய பெண் தம் கைபேசியில் Snapchat செயலியைக் கொண்டு தம் நண்பர்களைத் தொடர்புக்கொண்டார். தாம் கடத்தப்பட்டதாகவும் தாம் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் செயலியின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

செயலி மூலம் தோழி இருக்கும் இடத்தை நிர்ணயித்துக் காவல்துறைக்குத் தெரிவித்தனர் நண்பர்கள்.

அங்கு விரைந்த காவல்துறையினர், பலாத்காரம் செய்த ஆடவரைக் கைது செய்தனர்.

கடத்தல் முயற்சியில் ஈடுப்பட்ட மற்ற இரு ஆடவர்களும் கைதுசெய்ப்பட்டனர்.

Snapchat செயலி மூலம் ஒருவரோடு ஒருவர், படங்கள், காணொளிகள் வாயிலாகத் தொடர்புகொள்ளலாம். இருக்கும் இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் அம்சமும் உண்டு.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்