Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே பறந்த 'டிரம்ப் பேபி'

அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சித்திரிக்கும் குழந்தை வடிவிலான பலூன் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று (ஜூலை 13) பறக்கவிடப்பட்டது. 

வாசிப்புநேரம் -
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே பறந்த 'டிரம்ப் பேபி'

படம்: REUTERS/Peter Nicholls

லண்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சித்திரிக்கும் குழந்தை வடிவிலான பலூன் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று (ஜூலை 13) பறக்கவிடப்பட்டது.

ஆரஞ்சு நிறத்தில் அணையாடை அணிந்தவாறு மக்களைப் பரவசப்படுத்தி வருகிறது. கோபமான தோற்றத்துடன் 'டிரம்ப் பேபி' வலம் வருகிறது.

அதிபர் டிரம்ப் பிரிட்டனுக்கு வியாழக்கிழமை சென்று சேர்ந்தார். தலைநகர் லண்டனுக்குத் தாம் செல்வதை அங்குள்ளவர்கள் விரும்பாத காரணத்தால் அந்நகரை முடிந்தவரை தவிர்க்கப் போவதாக Sun நாளிதழிடம் அவர் தெரிவித்தார்.

டிரம்ப்பின் லண்டன் வருகைக்கு எதிராக அந்த பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றில் பங்கேற்க 64,000க்கும் மேற்பட்ட மக்கள் பதிவு செய்துள்ளனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்