Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடாவில் பனி 'கார்' : ஓவியரிடம் ஏமாந்த காவல்துறை

கார்களை நிறுத்தக்கூடாத இடத்தில் அதனை அவர் செய்தார். அதனைக் கண்ட காவல்துறை அதிகாரிகள் உண்மையான கார் என நினைத்து சோதனை செய்தனர்!

வாசிப்புநேரம் -
கனடாவில் பனி 'கார்' : ஓவியரிடம் ஏமாந்த காவல்துறை

(படம்: Facebook/L.S.D Laprise Simon Designs)

பனியைப் பயன்படுத்தி அசல் காரைப் போன்ற ஒன்றை கனடிய ஓவியர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

கார்களை நிறுத்தக்கூடாத இடத்தில் அதனை அவர் உருவாக்கியிருந்தார். அதனைக் கண்ட காவல்துறை அதிகாரிகள் உண்மையான கார் என நினைத்து சோதனை செய்தனர்!

பனியை அகற்றும் அதிகாரிகளை ஏமாற்றுவதே தமது நோக்கமாக இருந்ததென அதனை உருவாக்கியதாக 33 வயது சைமன் லெப்ரைஸ் சொன்னார்.

DeLorean DMC-12 ரக காரைப் போல அவரின் பனி கார் தோற்றமளித்தது.

ஏமாந்த காவல்துறை அதிகாரிகள் கோபப்படவில்லை.
அதற்கு மாறாக அன்றைய பொழுதைச் சிறந்ததாய் ஓவியர் மாற்றியதாக அதிகாரிகள் சிறுகுறிப்பை எழுதிவைத்துச் சென்றனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்