Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தடுப்பூசிப் போடுவதற்குப் பனியில் 10 கிலோமீட்டர் நடந்த 90 வயது மூதாட்டி

COVID-19 தடுப்பூசி போடுவதற்குக் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் நடந்துள்ளார் 90 வயது மூதாட்டி ஒருவர்.

வாசிப்புநேரம் -
தடுப்பூசிப் போடுவதற்குப் பனியில் 10 கிலோமீட்டர் நடந்த 90 வயது மூதாட்டி

(கோப்புப் படம்: Reuters)

COVID-19 தடுப்பூசி போடுவதற்குக் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் நடந்துள்ளார் 90 வயது மூதாட்டி ஒருவர்.

அமெரிக்காவின் சியெட்டல் நகரைச் சேர்ந்த ஃப்ரேன் கோல்ட்மன் (Fran Goldman) இரண்டு கைத்தடிகளுடன் பனியில் நடந்தார்.

அவர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பதிவு செய்யப் பலமுறை முயற்சி செய்தார். இருப்பினும் வாய்ப்பு கிட்டவில்லை.

மூதாட்டிக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தேதி உறுதியானது.

மோசமான வானிலை காரணமாகத் தடுப்பு மருந்து நிலையத்திற்கு வாகனம் ஓட்டுவது சாத்தியப்படவில்லை.

எப்படியாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று எண்ணிய கோல்ட்மன், அங்கு நடந்தே செல்ல முடிவெடுத்தார்.

அவர் அதை ஒத்திகை பார்ப்பதற்குப் பனியில் 5 கிலோமீட்டர் நடந்தார்!

"அது சுலபமல்ல. சவாலாக இருந்தது" என்று மூதாட்டி சொன்னார்.

இருப்பினும், தடுப்பூசி போடுவதற்கு அவர் 5 நிமிடங்கள் மட்டுமே தாமதமாகச் சென்றார்.

மூதாட்டியின் செயலைப் பாராட்டாமல் விடுவார்களா .. பலரிடமிருந்து ஏராளமான பாராட்டுகள் குவிந்தன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்