Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Google, Amazon போன்ற நிறுவனங்கள் செலுத்தும் வரி மீது G20 தலைவர்களின் கவனம்

குறைவான வரியைச் செலுத்த முனையும் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களை எதிர்கொள்ள, உலகப் பொருளியல்கள் ஒன்றுகூடவேண்டும் என்று G20 அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
Google, Amazon போன்ற நிறுவனங்கள் செலுத்தும் வரி மீது G20 தலைவர்களின் கவனம்

(படம்: REUTERS/Ahmed Yosri)

குறைவான வரியைச் செலுத்த முனையும் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களை எதிர்கொள்ள, உலகப் பொருளியல்கள் ஒன்றுகூடவேண்டும் என்று G20 அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Google, Amazon, Facebook ஆகியவை தற்போது தங்கள் கிளை நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு வரி செலுத்துகின்றன.

அவை இனி தங்கள் நிறுவனங்கள் வர்த்தகம் செய்யும் இடத்திற்கு வரி செலுத்தும் வகையில், OECD எனப்படும் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு மன்றம் விதிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இதனால், நாடுகளின் வரி வருவாயில் ஓராண்டுக்கு 100 பில்லியன் டாலர் அதிகரிப்பைக் காணலாம் என்று அது கூறியது.

பல தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்ட அமெரிக்கா, புதிய விதிகள் நடப்புக்கு வருவதை இவ்வாண்டு அதிபர் தேர்தல் வரை தள்ளிவைத்துள்ளது.

இருப்பினும், நவம்பர் தேர்தல் வரை காத்திருக்கமுடியாது என்று உலகப் பொருளியல் தலைவர்கள் கூறுகின்றனர்.

ஜூலை மாதத்திற்குள் வரி விகிதத்தை உறுதிசெய்ய எண்ணுகிறது பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு மன்றம்.

அதைப்பற்றி இவ்வாரயிறுதியில், நடைபெறும் G20 கூட்டத்தில் பேசப்படும் என்று நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்