Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'சமூக ஊடகங்கள் என்னைப் பாரபட்சமாகச் சித்திரிக்கின்றன' - அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அந்நாட்டின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுவருகிறார்.

வாசிப்புநேரம் -
'சமூக ஊடகங்கள் என்னைப் பாரபட்சமாகச் சித்திரிக்கின்றன' - அமெரிக்க அதிபர் டிரம்ப்

(படம்: MANDEL NGAN/AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அந்நாட்டின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுவருகிறார்.

அவற்றில் சில தம்மைப் பாரபட்சமாகச் சித்திரிப்பதாய் அவர் குறைகூறினார்.

திரு டிரம்ப் வெள்ளை மாளிகையில் சமூக ஊடக மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள, சமூக ஊடக ஜாம்பவான்களான Facebook, Twitter ஆகியவற்றுக்கு அழைப்பு இல்லை.

மற்றொருபுறம், சமூக ஊடகத் தளங்களைக் கையாள்வதில் பாரபட்சம் தென்படுவதாக சமூக ஊடகத்துறை விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர்.

வெகுசில சமூக ஊடகங்களே தவறான தகவல்களை வெளியிடுகின்றன; சதிவேலைகளில் ஈடுபடுகின்றன; பல சமூக ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன என்று அவர்கள் வாதிடுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்