Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இரு கொரியாக்களின் தலைவர்கள் நாளை சந்திப்பு

இரு கொரியாக்களின் தலைவர்கள் நாளை சந்தித்துப் பேசவுள்ளனர். 

வாசிப்புநேரம் -
இரு கொரியாக்களின் தலைவர்கள் நாளை சந்திப்பு

(படம்: AFP)

இரு கொரியாக்களின் தலைவர்கள் நாளை சந்தித்துப் பேசவுள்ளனர்.

அதற்கு முன்னர் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை இரு கொரியாக்களின் எல்லையில் நேரில் வரவேற்பார்.

பிறகு, வட கொரியத் தலைவர் இராணுவ எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்வார் என தென்கொரியா தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி நாளை காலை எட்டரை மணிக்கு இரு கொரியாக்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும்.

வடகொரிய தலைவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்புச் சடங்கிற்கு அவரை அழைத்துச் செல்ல, தென்கொரிய ராணுவத்தின் கௌரவப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய தலைவர் கிம் இருவருக்கும் இடையிலான அதிகாரத்துவக் கலந்துரையாடல் சிங்கப்பூர் நேரப்படி காலை ஒன்பதரை மணிக்குத் தொடங்கும்.

சந்திப்பைத் தொடர்ந்து, இரு தரப்பும் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைப் பற்றி அறிவிக்கவிருப்பதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்