Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிபர் டிரம்ப்பை விமர்சிக்கும் படங்களைத் திருத்தியதற்காக மன்னிப்புக் கோரிய அமெரிக்க ஆவணக் காப்பகம்

அமெரிக்க ஆவணக் காப்பகம், தனது சேமிப்பில் வைத்திருந்த நிழற்படம் ஒன்றைத் திருத்தியதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.

வாசிப்புநேரம் -
அதிபர் டிரம்ப்பை விமர்சிக்கும் படங்களைத் திருத்தியதற்காக மன்னிப்புக் கோரிய அமெரிக்க ஆவணக் காப்பகம்

(படம்:REUTERS/Bryan Woolston/File Photo)

அமெரிக்க ஆவணக் காப்பகம், தனது சேமிப்பில் வைத்திருந்த நிழற்படம் ஒன்றைத் திருத்தியதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.

அந்த விவகாரத்தில், தான் தவறு செய்துவிட்டதை காப்பகம் ஒப்புக்கொண்டது.

திருத்தப்பட்ட படத்தை இப்போது அகற்றிவிட்டதாகக் காப்பகம் தெரிவித்தது.

திருத்தப்படாத உண்மையான படத்தை விரைவில் இடம்பெறச் செய்ய அது உறுதிகூறியது.

ஆவணக் காப்பகத்தில் உள்ள படம் திருத்தப்பட்டது குறித்த செய்தியை, வாஷிங்டன் போஸ்ட் நாளேடு முதலில் வெளியிட்டிருந்தது.

2017-ஆண்டில் நடைபெற்ற பெண்கள் பேரணி ஒன்றில், அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட தட்டிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.

அவற்றுள் ஒன்றில், "God Hates Trump" என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த வாசகத்தை, ஆவணக் காப்பகம் அகற்றிவிட்டிருந்தது.

சில படங்களில் உள்ள வாசகங்கள், வாசிக்க முடியாதபடி மறைக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து, வரலாற்றை உள்ளது உள்ளபடி ஆவணப்படுத்த வேண்டிய ஆவணக் காப்பகம் எப்படி அந்தப் படத்தைத் திருத்தலாம் அல்லது அகற்றலாமென சர்ச்சை உருவானது.

ஆனால், சர்ச்சைக்குள்ளான படம் ஆவணப்படுத்துவதற்கானது அல்ல என்று குறிப்பிட்ட காப்பகம், தனது விளம்பரத்துக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்தியதாகக் கூறியது.

இருப்பினும் அதைத் திருத்தியது தவறுதான் என்பதைக் காப்பகம் ஏற்றுக்கொண்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்