Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன் மக்களவையில் குரங்குகளைக் காட்டும் ஓவியம் $17 மில்லியனுக்கு விற்பனை

'பேங்ஸி' எனும் மர்ம ஓவியர் பிரிட்டன் மக்களவையில் சிம்பன்ஸி குரங்குகள் நிறைந்திருப்பதுபோல் தீட்டியுள்ள ஓவியம் 9.9மில்லியன் பவுண்டுக்கு (சுமார் 17 மில்லியன் வெள்ளி) விற்பனையாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
பிரிட்டன் மக்களவையில் குரங்குகளைக் காட்டும் ஓவியம் $17 மில்லியனுக்கு விற்பனை

(படம்: Reuters)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

'பேங்ஸி' எனும் மர்ம ஓவியர் பிரிட்டன் மக்களவையில் சிம்பன்ஸி குரங்குகள் நிறைந்திருப்பதுபோல் தீட்டியுள்ள ஓவியம் 9.9மில்லியன் பவுண்டுக்கு (சுமார் 17 மில்லியன் வெள்ளி) விற்பனையாகியுள்ளது.

13 அடி அகலம் கொண்ட அந்த ஓவியத்தை மர்ம சாலையோர ஓவியக் கலைஞர் பேங்ஸி, 2009 ஆம் ஆண்டு தீட்டியதாகக் கூறப்படுகிறது.

1.5 முதல் 2 மில்லியன் பவுண்டுக்குள் விற்பனையாக வாய்ப்பிருப்பதாக அதை ஏலத்தில் விட்ட Sotheby's தெரிவித்தது.

ஆனால் அது எதிர்பார்ப்பைவிட 5 மடங்கு அதிக விலைக்குப் போனது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஏல விற்பனை முடிந்தவுடன் Instagram பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் பேங்ஸி.

"பேங்ஸி ஓவியத்துக்குச் சாதனை விலை! அதற்கு இப்போது நான் சொந்தக்காரன் இல்லை என்பது அவமானம்." என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்குமுன் 2008-ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் பேங்ஸியின் ஓவியம் சுமார் 2.5 மில்லியன் வெள்ளிக்கு விற்பனையானது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்