Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்னாப்பிரிக்காவில் அதிவேகமாகப் பரவும் Omicron கிருமி

தென்னாப்பிரிக்காவில் ஓமக்ரான் வகைக் கிருமி அதிவேகமாகப் பரவிவருகிறது.

வாசிப்புநேரம் -
தென்னாப்பிரிக்காவில் அதிவேகமாகப் பரவும் Omicron கிருமி

படம்: AFP / Michele Spatari

தென்னாப்பிரிக்காவில் ஓமக்ரான் வகைக் கிருமி அதிவேகமாகப் பரவிவருகிறது.

மற்ற ரகக் கிருமிகளைக் காட்டிலும் அது மீண்டும் தொற்றக்கூடிய அபாயம் அதிகமுள்ளது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கிருமித்தொற்றுக்கு மீண்டும் ஆளாகக்கூடிய அபாயம் முன்பைவிட 3 மடங்கு அதிகம் என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் தெரிவித்தது.

அந்நாட்டில் கடந்த மாத நடுப்பகுதியில் அன்றாடம் சுமார் 200 முதல் 300 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

நேற்று (டிசம்பர் 2) அந்த எண்ணிக்கை 11,000ஐத் தாண்டியது.

எந்த வகைக் கிருமி புதிய தொற்றுச் சம்பவங்களுக்குக் காரணம் என்பதுபற்றி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஓமக்ரான் கிருமி வகையே அங்குப் பரவலாய் அடையாளம் காணப்படுவதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

தென்னாப்பிரிக்க மக்கள்தொகையில் சுமார் 25 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

வளர்ந்த நாடுகளைவிட தடுப்பூசி போடும் நடவடிக்கையில் அது பின்தங்கியிருந்தாலும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைவிட முன்னணியில் உள்ளது.

ஆப்பிரிக்க மக்கள்தொகையில் 7.5 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

80 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோர் இன்னும் ஒரு தடுப்பூசியைக்கூடப் போட்டுக்கொள்ளவில்லை.  

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்