Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்னாப்பிரிக்காவில் வரும் மாதங்களில் கிருமித்தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கக்கூடும்

தென்னாப்பிரிக்காவில் இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் 40,000 பேர் கொரோனா கிருமித்தொற்றால் மரணமடைவர்  என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தென்னாப்பிரிக்காவில் வரும் மாதங்களில் கிருமித்தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கக்கூடும்

படம்: REUTERS/Siphiwe Sibeko

தென்னாப்பிரிக்காவில் இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் 40,000 பேர் கொரோனா கிருமித்தொற்றால் மரணமடைவர் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை வல்லுநர்களும் கல்வியாளர்களும் அரசாங்கத்திடம் அந்த முன்னுரைப்பை வெளியிட்டனர்.

அடுத்த மாதம் முதல் தென்னாப்பிரிக்காவில் முடக்கநிலை தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்திலிருந்து அங்குப் புகையிலை, மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. முடக்கநிலை கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்பட்டது.

சுமார் 57 மில்லியன் பேர் வாழும் நாட்டில், 17,200 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது; 312 பேர் மாண்டனர்.

ஒப்புநோக்க, 47 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஸ்பெயினில் 278,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 28,000 பேர் மாண்டனர்.

தென்னாப்பிரிக்காவில் அடுத்து வரும் மாதங்களில் கிருமித்தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் கிருமித்தொற்று எண்ணிக்கை உச்சத்தை எட்டக்கூடும். சுமார் 1.2 மில்லியன் பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகலாம் என்று அறிக்கை சுட்டியது.

மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஒருசில வாரங்களில் நிறைந்துவிடும் என்று கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்