Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பலமுறை உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா கிருமி வகை தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு

தென்னாப்பிரிக்காவில் புதிய கொரோனா கிருமி வகை அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

தென்னாப்பிரிக்காவில் புதிய கொரோனா கிருமி வகை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனால் நோய்ப்பரவல் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கின.

B.1.1.529 என்றழைக்கப்படும் புதுவகைக் கிருமி, பலமுறை உருமாற்றம் பெற்றுள்ளது என்றும்
அது உடலின் தடுப்பாற்றலைக் கடந்து, இன்னும் எளிதில் பரவக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் சுமார் 10 மாநிலங்களில் அவ்வகைக் கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிருமி, போட்ஸ்வானா (Botswana) , ஹாங்காங் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்திருந்தோரிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

புதுவகைக் கிருமி ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று தென்னாப்பிரிக்கச் சுகாதார அமைச்சர் ஜோ ஃபாலா (Joe Phaahla) கூறினார்.

இம்மாதத் தொடக்கத்தில் அங்கு சுமார் 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் நேற்று முன்தின நிலவரப்படி 1,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்