Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'தென்னாப்பிரிக்கா மீதான பயணத் தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும்'

தென்னாப்பிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் அதிபர் சைரில் ரமஃபோஸா (Cyril Ramaphosa), வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
'தென்னாப்பிரிக்கா மீதான பயணத் தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும்'

(படம்: AFP)

தென்னாப்பிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் சைரில் ரமஃபோஸா (Cyril Ramaphosa), வலியுறுத்தியுள்ளார்.

பயணத் தடைகள் நியாயமற்றவை என்று அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள், ஒமக்ரான் (Omicron) என்ற புதிய கிருமி குறித்துச் சென்ற வியாழக்கிழமை (நவம்பர் 25) தகவல் அளித்தனர்.

அதை அடுத்து, பல ஐரோப்பிய, ஆசிய நாடுகள், ஆப்பிரிக்காவின் தென்பகுதி நாடுகளுக்குப் பயணத் தடை விதித்துள்ளன.

அந்த நடவடிக்கை வருத்தமளிப்பதாகவும், அது அறிவியல் பூர்வமான முடிவல்ல என்றும் திரு. ரமஃபோஸா கூறினார்.

பொருளியல் மேலும் பாதிக்கப்படுவதோடு, கிருமித்தொற்றிலிருந்து மீளும் சாத்தியத்தையும் பயணத் தடைகள் குறைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உலகச் சுகாதார நிறுவனம், ஒமக்ரான் வகை கிருமியை அக்கறைக்குரியதாக வகைப்படுத்தியுள்ளது.

அது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்