Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவின் 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவின் 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் தென்பகுதி நாடுகளில் அடையாளம் காணப்பட்ட Omicron கிருமி, நாட்டில் அடுத்த கட்ட நோய்ப்பரவலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் ஆஸ்திரேலியா கவனமாக உள்ளது.

போட்ஸ்வானா (Botswana), எஸ்வாட்டினி (Eswatini), லெசோத்தோ (Lesotho), மொசாம்பிக் (Mozambique), நமிபியா (Namibia), தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே (Zimbabwe), ஷெசெல்ஸ் ( Seychelles), மலாவி (Malawi) ஆகிய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி இல்லை.

அந்நாடுகளிலிருந்து வரும் ஆஸ்திரேலியக் குடிமக்கள் நாட்டிற்குள் வர அனுமதி உண்டு. ஆனால் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வருவதாகவும் தேவைப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்தது.

- Reuters/ac 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்