Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 கிருமி பெருமளவில் பரவும் இடமாக உருமாறும் தென்னமெரிக்கா

COVID-19 கிருமி பெருமளவில் பரவும் இடமாக உருமாறும் தென்னமெரிக்கா

வாசிப்புநேரம் -

தென்னமெரிக்கா, கொரோனா கிருமி பெருமளவில் பரவும் இடமாக உருவெடுத்து வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அங்குள்ள பல நாடுகளில், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று நிறுவனத்தின் அவசரநிலைப் பிரிவுத் தலைவர் மைக் ராயன் (Mike Ryan) கூறினார்.

நேற்றைய நிலவரப்படி, உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து, பிரேசிலில் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

அங்கு மொத்தம் 330,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்றால் மேலும் ஆயிரம் பேர் மாண்டதால், மாண்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியது.

கிருமித்தொற்றுக்கான பரிசோதனைகள் அங்கு இன்னும் தீவிரமாக இடம்பெறவில்லை.

எனவே, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இதற்கிடையே, மெக்சிக்கோவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மெக்சிக்கோவில் சுமார் 62,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000 பேர் நோய்க்குப் பலியாயினர்.

அமெரிக்காவின் நெருக்குதலால், மெக்சிக்கோ பொருளியல் சார்ந்த சில நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

அது கட்டுப்பாடுகளை முன்கூட்டியே தளர்த்துவதாக அஞ்சப்படுகிறது.

அந்நாட்டில் பரிசோதனை முயற்சிகள் பரவலான நிலையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்