Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா, 2020க்குள் விண்வெளிப் படையை உருவாக்கத் திட்டம்

அமெரிக்கா அதன் விண்வெளிப் படையை 2020க்குள் அமைக்கவிருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

அமெரிக்கா அதன் விண்வெளிப் படையை 2020க்குள் அமைக்கவிருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார்.

விண்வெளிப் படையை உருவாக்குவதற்கு இது சரியான நேரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விண்வெளிப் படையில் பணியாற்ற கிட்டத்தட்ட 18,000க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்கள் விண்வெளியில் உள்ள 140க்கும் மேற்பட்ட செயற்கைத் துணைக்கோள்களைக் கண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

கடந்த காலத்தில் எப்படி புதிய வழிகளில் அமெரிக்கா, தற்காப்பை மேம்படுத்தியதோ அதே போல் தற்போதும் அது திட்டமிடுவதாகத் திரு. பென்ஸ் கூறினார்.

விண்வெளிப் படையை உருவாக்குவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஆயுதப் படையின் ஆறாம் பிரிவாக, விண்வெளிப் படையை உடனே உருவாக்க வேண்டுமென, கடந்த ஜூன் மாதம் அவர் கூறியிருந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்