Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முதன்முறை விண்வெளிச் சுற்றுலா செல்லும் பயணிகள்

முதன்முறையாக, 4 தனியார் வாடிக்கையாளர்கள் SpaceX விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
முதன்முறை விண்வெளிச் சுற்றுலா செல்லும் பயணிகள்

(கோப்புப் படம்: Reuters)

முதன்முறையாக, 4 தனியார் வாடிக்கையாளர்கள் SpaceX விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லவுள்ளனர்.

புளோரிடா மாநிலத்தில் உள்ள NASAவின் கென்னடி (Kennedy) நிலையத்திலிருந்து அவர்கள் இன்று விண்வெளிக்குப் புறப்படுவர்.

அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு அப்பால், 575 கிலோமீட்டர் உயரத்துக்கு விண்கலம் செல்லும்.

பயணத்தின் இறுதியில், அமெரிக்கப் பயணிகள் நால்வரும் பெரிய வான்குடைகளில் புளோரிடா கடற்கரையில் இறங்குவர்.

38 வயது ஜேரட் ஐசக்மேன் (Jared Isaacman) அந்தப் பயணத்திற்காகப் பல மில்லியன் டாலர் செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போட்டி மூலம் தெரிவுசெய்யப்பட்ட மூவரை ஐசக்மேன், தம்முடன் அழைத்துச் செல்கிறார்.

விண்வெளிப் பயணத்திற்காக, நால்வரும் சுமார் 6 மாதம் பயிற்சி செய்தனர்.

விண்கலம் தானாக இயங்கக்கூடியது என்றாலும், நெருக்கடி நேரத்தில் அதை இயக்கவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பயணம் மூலம் St Jude's சிறார் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு 200 மில்லியன் டாலர் நிதி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

நால்வரும் எடுத்துச் செல்லும் சில பொருள்கள் பின்னர் ஏலத்தில் விடப்படும்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்