Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: பெல்ஜியத்திலும் ஸ்பெய்னிலும் தளர்த்தப்படும் விதிமுறைகள்

COVID-19: பெல்ஜியத்திலும் ஸ்பெய்னிலும் தளர்த்தப்படும் விதிமுறைகள்

வாசிப்புநேரம் -
COVID-19: பெல்ஜியத்திலும் ஸ்பெய்னிலும் தளர்த்தப்படும் விதிமுறைகள்

படம்: AFP/Gabriel BOUYS

பெல்ஜியத்திலும் ஸ்பெய்னிலும் COVID-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

பல மாதங்களாக நடப்பிலிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் மக்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் (Brussels) இரவுநேர ஊரடங்கு நீக்கப்பட்டது.

பல மாதங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள சுதந்திரத்தை அனுபவிக்க இளையர்கள் பொது இடங்களில் குழுமினர்.

சென்ற அக்டோபரிலிருந்து உணவகங்களும் மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருந்தன.

அவற்றைத் திறக்கவேண்டுமென்று உரிமையாளர்கள் கடந்த சில வாரங்களாகக் கோரிவந்தனர்.

தற்போது உணவகங்கள், மதுபானக்கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெய்னிலும் பல பகுதிகளில் நடப்பிலிருந்த இரவுநேர ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது.

அக்டோபர் மாதம் அங்கு நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடளாவிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது.

உள்ளூரில் சில பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

பல மாதங்களுக்குப் பிறகு, மக்கள் வேறு வட்டாரங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுமின்றிப் பயணம் செய்வது இப்போது சாத்தியமாகியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்