Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முதியோர் இல்லங்களைச் சுத்தப்படுத்தச் சென்றபோது சடலங்களைக் கண்ட ஸ்பானிய ராணுவ வீரர்கள்

ஸ்பெயின்: முதியோர் இல்லங்களைச் சுத்தப்படுத்தச் சென்ற ராணுவ வீரர்கள், அங்கு சடலங்களைக் கண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

ஸ்பெயின்: முதியோர் இல்லங்களைச் சுத்தப்படுத்தச் சென்ற ராணுவ வீரர்கள், அங்கு சடலங்களைக் கண்டுள்ளனர்.

COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிராக ஸ்பெயின் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக முதியோர் இல்லங்கள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதற்கு ராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் சென்ற பல்வேறு இடங்களில், முதியோர் ஒழுங்காகக் கவனிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

முதியோர் சிலர், கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், சிலர் தங்கள் படுக்கையில் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அது குறித்துத் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதியோர் இல்லங்களில் மூத்தோர் நடத்தப்படும் விதம் குறித்து, கண்டிப்புடன் இருக்கவிருப்பதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

கிருமித்தொற்று உலகளவில் முதியோரை அதிகம் பாதித்துவரும் நிலையில், இத்தகைய இல்லங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு சொன்னது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்