Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஸ்பெயின்: அதிகரித்துவரும் கிருமித்தொற்று - 5 வட்டாரங்களின் எல்லைகள் மூடப்படும்

ஸ்பெயின்: அதிகரித்துவரும் கிருமித்தொற்று - 5 வட்டாரங்களின் எல்லைகள் மூடப்படும்

வாசிப்புநேரம் -
ஸ்பெயின்: அதிகரித்துவரும் கிருமித்தொற்று - 5 வட்டாரங்களின் எல்லைகள் மூடப்படும்

படம்: AFP/Pau Barrena

ஸ்பெயினில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த, ஐந்து வாட்டாரங்களின் எல்லைகள் மூடப்படவுள்ளன.

வரும் வார இறுதியில் அனுசரிக்கப்படும் All Saints' Day விடுமுறையை முன்னிட்டு, அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் தேதியன்று ஸ்பானியர்கள், பாரம்பரியமாகத் தங்கள் அன்புக்குரியோரின் கல்லறைகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவர்.

இவ்வாண்டு அது ஞாயிற்றுக்கிழமை வருவதால், திங்கட்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை மக்கள் தங்களது வட்டாரங்களை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஸ்பெயினில் அறிவிக்கப்பட்ட கடுமையான நாடாளாவிய முடக்கம், கடந்த ஜூன் மாதம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

அதன்பிறகு அங்கு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.

இதுவரை ஸ்பெயினில் சுமார் ஒன்று புள்ளி ஒரு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்