Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஸ்பெயினில் தடுப்பூசி போடாதவர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தொற்று

ஸ்பெயினில் புதிதாக COVID-19

வாசிப்புநேரம் -
ஸ்பெயினில் தடுப்பூசி போடாதவர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தொற்று

படம்: AFP / ANDER GILLENEA

ஸ்பெயினில் புதிதாக COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசி போடாதவர்கள் என அந்நாட்டுச் சுகாதார
அமைச்சசு தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் அங்கு 27,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடையே முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்கள் 5.5 விழுக்காட்டினர்.

ஒரு முறை மட்டும் தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 11 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற அனைவரும் தடுப்பூசி போடாதவர்கள்.

ஸ்பெயினில் ஜூன் மாதப் பிற்பகுதியிலிருந்து COVID-19
நோய்த்தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

ஸ்பெயினில் 51 விழுக்காட்டினருக்கு ஏற்கனவே முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை அங்கு சுமார் 4.2 மில்லியன் பேருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டது.
81,000-க்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்