Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஸ்பெயினில் சொகுசுக் கப்பல்களுக்கு தொடரும் தடை

ஸ்பெயினில் சுற்றுலா நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு சொகுசுக் கப்பல்களுக்கான தடை தொடர்கிறது.

வாசிப்புநேரம் -
ஸ்பெயினில் சொகுசுக் கப்பல்களுக்கு தொடரும் தடை

(படம்: REUTERS/Nacho Doce)

ஸ்பெயினில் சுற்றுலா நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு சொகுசுக் கப்பல்களுக்கான தடை தொடர்கிறது.

COVID-19 நோய்த்தொற்று மீண்டும் தலைதூக்காமல் இருக்க அந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஸ்பெயின் கூறியது.

அதனால் ஸ்பானிய கடல் எல்லையில் சொகுசுக்கப்பல்கள் அணைய முடியாது.

சொகுசுக்கப்பல்கள் மூலம் கிடைக்கும் தொகை ஸ்பெயினின் பொருளாதாரத்தில் 12 விழுக்காடு.

சென்ற ஆண்டு சொகுசுக்கப்பல்கள் மூலம் சுமார் 10 மில்லியன் பயணிகளை ஸ்பெயின் ஈர்த்தது.

சுற்றுப்பயணிகளுடன் வரும் சொகுசுக்கப்பல்கள், பொதுவாக பார்சலோனா, மலாகா, கேனரி தீவுகள் போன்ற இடங்களில அணையும். ஆனால் நோய்ப்பரவல் காரணமாக மார்ச் 14 ஆம் தேதியிலிருந்து அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சொகுசுக்கப்பல்களில் மூத்தோர் அதிகமாக பயணம் செய்வார்கள் அதனால் அவர்கள் எளிதில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படலாம்.

ஸ்பெயின் மட்டுமின்றி வேறு சில நாடுகளும் சொகுசுக்கப்பல்களுக்குத் தடை விதித்துள்ளன.




விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்