Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தீத்திருவிழா - ஸ்பெயினின் கொளுத்தும் கொண்டாட்டம்

ஸ்பெயினின் வேலன்சியா நகர்....கலை காலாசார அம்சங்களுக்குப் பெயர் பெற்ற நகர்.

வாசிப்புநேரம் -
தீத்திருவிழா - ஸ்பெயினின் கொளுத்தும் கொண்டாட்டம்

படங்கள்: AFP / JOSE JORDAN

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஸ்பெயினின் வேலன்சியா நகர்....கலை காலாசார அம்சங்களுக்குப் பெயர் பெற்ற நகர்.

வானமே ஒளிமயமாய்க் காட்சியளிக்கிறது.  பற்றி எரியும் தீ..எங்கு திரும்பினும் தீ...வானளவு எரிகிறது.

ஆனால் மக்கள் மனத்தில் உற்சாகம்..கொண்டாட்டம்.

வேலன்சியாவின் வித்தியாசமான தீத் திருவிழா.

ஏகப்பட்ட உருவ பொம்மைகள் சாலைகளை வலம் வருகின்றன.

கேலிச்சித்திரக் கதாபாத்திரங்கள், கடல்நாகங்கள், வனதேவதைகள், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் போன்ற பிரபல அரசியல் தலைவர்கள்...இப்படி உயரஉயரமாகப் பல பொம்மைகள்.

சில பொம்மைகளின் உயரம் 4 மாடிக் கட்டடம் அளவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

பல்லாயிரம் யூரோ செலவில் இத்தனையும். சில நாள் ஊர்வலத்துக்குப் பின் இவை அனைத்தும் எரியூட்டப்படுகின்றன.

இதன் பின்னணி: தச்சுத் தொழில் செய்வோரின் கடவுளாகப் போற்றப்பட்ட செயிண்ட் ஜோசஃப்பைப் போற்றும் பல்லாயிரம் ஆண்டு பழமையான திருவிழா.

இதன் சிறப்பு: ஐக்கிய நாட்டு நிறுவன UNESCO அமைப்பின் தொட்டுணர முடியா காலாசார அம்சங்களில் ஒன்று.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்