Images
  • kitr1
    (படம்: AFP / DESIREE MARTIN)

ஸ்பெயின்: வானங்களை அலங்கரித்த பட்டங்கள்

பூனைகள், கேலிச்சித்திர கதாபாத்திரங்கள், பூக்கள்.

இவற்றைப் பட்டங்களின் வடிவில் பார்த்திருக்கிறீர்களா?

இப்படிப் பலவிதமான வடிவங்களிலும் வண்ணங்களிலும் செய்யப்பட்ட பட்டங்கள் நேற்று ஸ்பெயின் வானத்தை அலங்கரித்தன.

ஸ்பெயினின் ஃபுயெர்டேவெண்டுரா (Fuerteventura) தீவில் நேற்று 31ஆவது அனைத்துலக பட்டம்விடும் விழா நடைபெற்றது.

அதில் 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 450 பேர் தங்கள் பட்டங்களை வானில் பறக்கவிட்டு அழகுபார்த்தனர்.

நீங்களும் பார்க்கலாமே... 




Top