Images
  • spain (1)
    AFP/Pau Barrena

ஸ்பெயினில் ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்படுள்ள முடக்கநிலை

ஸ்பெயினில் நிலவும் முடக்கநிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஸ்பெயின் அவசரநிலை இத்துடன் ஐந்தாவது முறை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 177 பேர் முடக்கநிலை நீட்டிக்கப்படவேண்டும் என்றும் 162 பேர் வேண்டாம் என்றும் வாக்களித்தனர்.

அதையடுத்து அடுத்த மாதம் 6ஆம் தேதிவரை ஸ்பெயினில் முடக்கநிலை நடப்பில் இருக்கும்.

இருப்பினும், நாட்டின் வலதுசாரி கட்சியினர் COVID-19 சூழலை அரசாங்கம் கையாண்டுவரும் விதம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான மக்களும் முடக்கநிலையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும், மார்ச் 14ஆம் தேதி அறிமுகம் கண்ட முடக்கநிலை காரணமாகவே கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கணிசமாக குறைக்க முடிந்தது என்று ஸ்பேயின் அரசாங்கம் குறிப்பிட்டது.

அண்மை நிலவரப்படி அங்கு மேலும் 95 கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

ஏப்ரல் மாதத்தில் அந்த எண்ணிக்கை 950ஆக இருந்தது.  

Top