Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிகிச்சையில் தாமதம்- கோபத்தில் மருத்துவமனைக்குத் தீ வைத்த நோயாளியின் உறவினர்

கனேரி தீவுகளில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட நோயாளிகளும் ஊழியர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 

வாசிப்புநேரம் -

மேட்ரிட், ஸ்பெயின்: கனேரி தீவுகளில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட நோயாளிகளும் ஊழியர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் உறவினர் தீயை மூட்டியதாக நம்பப்படுகிறது.

 தீ மூண்டதை அறிந்ததும் பலர் மருத்துவமனையிலிருந்து அடித்துப்பிடித்து வெளியேற முற்பட்டதில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. 124 நோயாளிகளும் 28 மருத்துவமனை ஊழியர்களும் பத்திரமாக இருப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.

தீயை மூட்டியவர் காவல்துறையிடம் சென்று தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தீச் சம்பவத்தில் பங்குள்ளதாக நம்பப்படும் மாது ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஸ்பானியக் காவல்துறை தெரிவித்தது.

நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் கோபம்கொண்ட உறவினர், எதிர்ப்பைத் தெரிவிக்க தீ மூட்டியதாய் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்