Spider Man - திரையில் மட்டும்தானா? நிஜ உலகிலும் ஊர்ந்து செல்வான்!
அமெரிக்காவில் ஃபிலெடெல்பியாவில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பிடித்தது. உடனடியாக, 15 மாடிகள் சரசரவென்று கட்டடச் சுவரில் இறங்கி பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இந்த 35 வயது ஆடவர்.
அதை ஹெலிகாப்டரில் வந்த தீயணைப்புப் படையினர் படம்பிடித்திருக்கின்றனர்.
சுவரில் தாவிச் செல்லும் சிலந்தி மனிதனின் ஆற்றல் இவரிடம் இருப்பதைக் கண்டு வியந்து போனார்கள் அவர்கள்.
ஆனால் நல்லவேளையாக அவர் பத்திரமாக இறங்கிவிட்டார்.