Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பழைய நினைவுகளைத் தூண்டும் விளையாட்டுகள் - கூடவே பயத்தையும் தரும் உலகப் பிரபலமான Squid Game தொடர்

Netflix காணொளிச் சேவையில் Squid Game என்ற  தொடர் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. 

வாசிப்புநேரம் -

Netflix காணொளிச் சேவையில் Squid Game என்ற தொடர் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு Squid Game தொடர் வெளிவந்தது.

அது ஒரு மிகப் பெரிய வெற்றியாக மக்களிடையே அமைந்தது.

அந்தக் தென்கொரிய விளையாட்டுத் தொடரை மையமாகக் கொண்டுள்ளது. ஆனால் அதே நேரம் தோற்றவர்கள் கொல்லப்படுவார்கள்.

தொடரின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள், கதாபாத்திரங்கள், மனித இயல்புகள் ஆகியவை ரசிகர்களால் அதிகமாகப் பேசப்பட்டன.

என்னென்ன விளையாட்டுகள்?

விளையாட்டில் மொத்தம் 456 பேர் கலந்துகொள்கின்றனர். அதில் பல தந்திரங்கள் உள்ளன.

அங்கு அவர்கள் ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே 45.6 பில்லியன் கொரிய வான் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதற்குப் பிறகு, அவர் விளையாட்டிலிருந்து வெளியேற வாய்ப்புக் கொடுக்கப்படும்.

யார் தோல்வி அடைகிறார்களோ அவர்கள் போட்டி நடக்கும்போதே சுட்டுக்கொல்லப்படுவர்.

வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்த பெரியவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் சம்பவங்களைப் பார்க்க மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்று தொடரின் இயக்குனர் ஒரு பேட்டியில் கூறினார்.

விளையாட்டில் ஒரு பகுதியாகக் கொரியர்களுக்குத் தங்களது குழந்தைப் பருவத்தில் விளையாடிய விளையாட்டுகள் நினைவிற்கு வருகின்றன.

மூன்றாம் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள டல்கோனா தேன்கூடு (Dalgona honeycomb) சவாலைப் பெரும்பாலான கொரியர்கள் குழந்தைகளாக இருந்தபோது விளையாடினார்கள்.

சவாலில் விளையாட்டாளர்கள் ஊசி ஒன்றைப் பயன்படுத்தி மெல்லிய தேன்கூடு மிட்டாயில் இருக்கும் வடிவத்தைக் கவனமாக வெட்டவேண்டும். அதைத் தவறாக வெட்டினால் அந்த நிமிடத்திலேயே கொல்லப்படுவார்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்