Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காரின் முன்பகுதியில் அணில்களின் கைவண்ணம்

பென்சில்வேனியாவிலுள்ள நூலகத்திற்குக் காரில் சென்றுகொண்டிருந்த ஹோலி பெர்சிக் (Holly Persic) தனது வாகனத்தில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தார். 

வாசிப்புநேரம் -
காரின் முன்பகுதியில் அணில்களின் கைவண்ணம்

படம்: Chris and Holly Persic via REUTERS

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்கா: பென்சில்வேனியாவிலுள்ள நூலகத்திற்குக் காரில் சென்றுகொண்டிருந்த ஹோலி பெர்சிக் (Holly Persic) தனது வாகனத்தில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தார்.

காரிலிருந்து கருகும் வாடை...விநோதமான சத்தம்...

காரின் இயந்திரத்தில் ஏதோ கோளாறு என அவருக்குத் தோன்றியது. ஆனால் ஹோலியின் காரின் முன்பகுதியில் வேறு சிக்கல்.

புல்லும் walnut கொட்டைகளும் அதில் நிறைந்திருந்தன.

குளிர்காலத்துக்குத் தயாராகும் அணில்கள் காரின் முன்பகுதியை உணவு சேகரிப்பதற்கான இடமாகப் பயன்படுத்திருக்கக்கூடும்.

வாரயிறுதி மட்டும்தான் வாகனம் வீட்டுக்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாம்.

அதற்குள் அதன் முன்பகுதியிலிருந்து 200க்கும் மேலான walnut கொட்டைகளை நீக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாம்!

இரண்டு நாளுக்கே இப்படியென்றால் நீண்ட விடுமுறையாக இருந்திருந்தால்?


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்