Images
  • stallone
    (படம்: Reuters/Mario Anzuoni)

பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டலோனுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றச்சாட்டு

ஹாலிவுட் கலைஞர் சில்வெஸ்டர் ஸ்டலோனுக்கு (Sylvester Stallone) எதிராகப் பதிவான பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Rocky ஆங்கிலத் திரைப்படப் புகழ் ஸ்டலோனுக்கு எதிராக மாது ஒருவர் காவல்துறையிடம் புகார் செய்திருக்கிறார்.

27 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பாலியல் பலாத்காரம் நடந்ததாக அந்த மாது கூறியதாக, ஸ்டலோனின் வழக்கறிஞர் சொன்னார்.

அது பற்றிய மேல்விவரங்கள் வழங்கப்படவில்லை.
தம் மீது பதிவான குற்றச்சாட்டை, ஸ்டலோன் மறுத்து வருகிறார்.

உங்கள் கருத்து

Top