Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Starbucks பிரச்சினை - 'நிறுவனத்தைப் புறக்கணிப்பது தீர்வாகாது'

அமெரிக்காவில் Starbucks நிறுவனத்தைப் புறக்கணிப்பது தங்கள் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்று அண்மையில் அங்கு நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கறுப்பின ஆடவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
Starbucks பிரச்சினை - 'நிறுவனத்தைப் புறக்கணிப்பது தீர்வாகாது'

(படம்: REUTERS/Mark Makela)

அமெரிக்காவில் Starbucks நிறுவனத்தைப் புறக்கணிப்பது தங்கள் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்று அண்மையில் அங்கு நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கறுப்பின ஆடவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

பிலடெல்பியாவில் உள்ள Starbucks காப்பிக் கடைக்குச் சென்ற கறுப்பின ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி விளக்கியுள்ளனர்.

நண்பர்களான கறுப்பின ஆடவர்கள் இருவரும் Starbucks காப்பிக் கடையில் சந்தித்துப் பானம் ஏதும் வாங்காமல் பேசிக் கொண்டு மற்றொரு நண்பருக்காகக் காத்திருந்தனர்.

அவர்களில் ஒருவர் அங்கிருந்த கழிப்பறையைப் பயன்படுத்த முயன்றபோது அவர், Starbucks நிர்வாகியால் தடுக்கப்பட்டார்.

சிறிது நேரம் கழித்து அங்கு காவல்துறையினர் வந்தனர்.

Starbucks கடைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கறுப்பினர் ஆடவர்கள் இருவரையும் கைவிலங்கிட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

பல மணிநேரம் கழித்து அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அந்தச் சம்பவம் அமெரிக்க மக்களிடம் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நடந்த சம்பவத்துக்கு Starbucks நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மன்னிப்புக் கோரினார்.

இந்நிலையில், தாங்கள் சிறையிலிருந்து உயிருடன் திரும்புவோமா என்பது பற்றியே அச்சமடைந்ததாகப் பாதிக்கப்பட்ட கறுப்பின ஆடவர்கள் கூறினர்.

தங்களுக்கு நேர்ந்ததுபோல வேறெவருக்கும் நேர்ந்து விடக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்