Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்திய தேசியப் பங்குச் சந்தை சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைமீது வழக்குத் தொடுத்துள்ளது

அது குறித்து இந்திய தேசியப் பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் லிமாய் (Vikram Limaye) கருத்து வெளியிட மறுத்துவிட்டார் என Today தெரிவித்தது. 

வாசிப்புநேரம் -
இந்திய தேசியப் பங்குச் சந்தை சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைமீது வழக்குத் தொடுத்துள்ளது

(படம்:AFP/Roslan Rahman)

இந்திய தேசியப் பங்குச் சந்தை சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைமீது வழக்குத் தொடுத்துள்ளது.

வரும் வாரங்களில் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் அதன் வருநிலை வர்த்தக ஒப்பந்தங்கள் வெளியிடப்படுவதைத் தடுக்கும் முயற்சியில் இந்திய தேசியப் பங்குச் சந்தை அந்த வழக்கைத் தொடுத்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் புதிய பொருட்களுக்குத் தற்காலிகத் தடை விதிப்பதன் தொடர்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது குறித்து சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய, சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைகளுக்கு இடையே பதற்றம் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

18 ஆண்டுப் பங்காளித்துவத்தைப் பாதிக்கும் வகையில் சர்ச்சை ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அனைத்துலக முதலீட்டாளர்கள் தங்களின் நிலை அறியாது இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது குறித்து இந்திய தேசியப் பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் லிமாய் (Vikram Limaye) கருத்து வெளியிட மறுத்துவிட்டார் என Today தெரிவித்தது.

கடந்த பிப்ரவரி மாதம், இந்திய தேசியப் பங்குச் சந்தை அனைத்து உரிம ஒப்பந்தங்களையும் நிறுத்தப்போவதாகத் தெரிவித்தது. வெளிநாட்டுத் தரப்புகளுக்கு விலைகள் அறிவிக்கப்படுவது நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்