Images
  • strawberry
    (படம்: Pixabay)

ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ராபெர்ரிகளில் இருந்த ஊசிகள்

ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட சில ஸ்ட்ராபெர்ரிகளில் தையலுக்குப் பயன்படுத்தப்படும் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பழங்களை நறுக்கி உண்ணுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிய ஸ்ட்ராபெர்ரிகளைக் கழுவிய பிறகு அவற்றை நறுஙககாமல் அப்படியே உண்பது வழக்கம்.

ஆனால், ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்று சின்னங்களில் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டன.

'Berry Licious', 'Berry Obsession' ஆகிய சின்னங்கள் விநியோகம் செய்த ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை வீசிவிடுமாறு ஆஸ்திரேலிய அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தினர்.

வட கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஊசிகள் தொடர்பான நான்கு புகார்கள் காவல்துறைக்குக் கிட்டியது.

அதனை அடுத்து அதிகாரிகள் நேற்று மாலை ஸ்ட்ராபெர்ரிகளைப் பற்றி எச்சரித்தனர். 

Top