Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பப்புவா நியூ கினியில் கடுமையான நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியில் (Papua New Guinea) ரிக்ட்டர் அளவில் 7.5ஆகப் பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பப்புவா நியூ கினியில் கடுமையான நிலநடுக்கம்

படம்: அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பப்புவா நியூ கினியில் (Papua New Guinea) ரிக்ட்டர் அளவில் 7.5ஆகப் பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரபால் (Rabaul) நகரின் கிழக்குக்கரையோரப் பகுதியிலிருந்து 33கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

10கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்கொண்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

சுனாமி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மையம்கொண்டிருந்த பகுதியில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் சுற்றுவட்டாரம் வரையில் சுனாமி அலைகள் எழக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உயிருடற்சேதம் பற்றிய தகவல் ஏதும் இதுவரை இல்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்