Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்தபோது தாய் தூங்கியதால் குழந்தை மூச்சுமுட்டி மரணம்

பிறந்து 15 நாள்களே ஆன குழந்தை மாண்டதன் தொடர்பில் மரண விசாரணை அதிகாரியின் முடிவு வெளியாகியிருக்கிறது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிறந்து 15 நாள்களே ஆன குழந்தை மாண்டதன் தொடர்பில் மரண விசாரணை அதிகாரியின் முடிவு வெளியாகியிருக்கிறது.

தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்தபோது பிள்ளைமீது தாய் தூங்கி விழுந்ததில் குழந்தைக்கு மூச்சுமுட்டி அது மாண்டிருக்கலாம் என்று மரண விசாரணை அதிகாரி கூறியிருக்கிறார்.

ஆனால் குழந்தையின் மரணத்துக்கான காரணத்தைத் திட்டவட்டமாகக் கூறமுடியாது என்பதால், அதைத் திறந்த தீர்ப்பாக அறிவிப்பதாய் அவர் சொன்னார்.

ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கும்போது தவறுதலாக இப்படி நடக்கச் சாத்தியம் இருப்பதாய் அரசாங்கத்தின் மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தெரிவித்தார்.

தாயையும் பிள்ளையையும் கவனிக்கும் மூன்றாம் நபர் ஒருவர் இருக்கும்போது மட்டுமே, தாய் அந்த முறையில் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றார் அவர்.

KK மகளிர் சிறார் மருத்துவமனையின் மூத்த தாதி ஒருவரது சாட்சியத்தை அவர் மேற்கோள் காட்டினார்.

தாய்மார் பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் வழிமுறைகள் குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றார் அவர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்